நாடாளுமன்றத் தேர்தல் - 2
பகுதி – 2 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட் டு தமிழ் நாட்டில் 40 எம் . பிக்கள் என மொத்த இந்தியாவில் 545 எம் . பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் எனப் பார்த்தோம் . எதற்காகச் செல்கிறார்கள் ? நமது பிரதிநிதியாக மாநிலங்களின் குரலை அங்கு பிரதிபலிக்க , மக்களுக்கு , மாநிலத்திற்கு, நாட்டிற்குத் தேவையான சட்ட திட்டங்களை வகுக்க , செயல்படுத்தவே செல்கிறார்கள் . இந்திய அரசியலமைப்பு மாநிலத்தை நிர்வகிக்கும் மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரம், நாட்டினை நிர்வகிக்கும் ஒன்றிய அரசுக்கு என்னென்ன அதிகாரம், இரு அரசுகளுக்குமான பொது அதிகாரங்கள் என்னென்ன என வகைப்படுத்தி உள்ளது. யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது எனத்தெரிந்து கொண்டால் தான் நம் பிரச்சனைகள் , நம் தேவைகளுக்கு ஏற்றபடி நம்மால் மாநில, மத்திய அரசுகளை தேர்ந்தெடுக்க முடியும் . மாநில அரசுக்கான அதிகாரங்கள் மாநிலப்பட்டியலில் அடங்கும் , மத்திய அரசுக்கான அதிகாரங்கள் ஒன்றிய ப்பட்டியலில் இருக்கும் . இருவரும் சேர்ந்து முடிவெடுப்பவை பொதுப்பட்டியலில் இருக்கும் . அதாவது ப...