வரலாறு அறிவோம் - 1

வரலாறு அறிவோம் - 1

தொல்குடி

குடிகள் குறித்த சான்றுகளை பெரும் கற்சின்னங்கள் மூலம் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் மூலமும் அறிகிறோம்.
குடி என்பதற்கு இல், திணை, குலம் ஆகியவை இணையான சொற்கள். சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் குறிப்பிட்ட இரத்த உறவுகளை (பங்காளிகளை) குறித்தது. காலப்போக்கில் குடிகள் தங்கி இருந்த இடத்தை குறித்தது.
சிறு சிறு குடிகளாக இருந்தவர்கள் ஆரம்ப காலங்களில் ஓரிடத்தில் தங்காமல் நாடோடியாகத் திரிந்து பின்னர் நிலையான இடங்களில் வாழத் தொடங்கினர்.
உணவு, உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினர். இரும்பை உருக்கி கருவிகள் செய்தனர். கலப்பை பயன்பாடு, தொழில் நுட்பங்கள் அறிமுகமாகின்றன. ஏரி, குளம் உருவாக்கம் பெறுகிறது.
உணவு உற்பத்தி, கால்நடைகள் பெருக்கம், கருவிகள் உற்பத்தி அதிகரிக்கவும் பண்டமாற்று முறை உருவாகிறது. குடிக்குள்ளே ஆரம்பித்து பின்னர் வெவ்வேறு குடிகளுக்கிடையே பரிமாற்றம் தொடங்குகிறது.
முதலில் வளங்களை பாதுகாப்பதன் மூலம் தலைவர்களாக ஆயினர். பின்னர் புதிய வளங்களை கைக் கொள்வதில் பூசலில் ஈடுபடத் தொடங்கினர். இதனாலேயே குறிப்பிட்ட காலம் வரை பூசலில் ஈடுபட வீரர்கள் வைக்கப் பட்டனர்.
பூசலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னங்கள் எழுப்பப் பட்டன.
தென்னிந்தியாவில் பெருங்கற் சின்னங்கள் பரவலாக காணப்படுவது கனிம வளமும், பெருவழி வணிகமும் நிறைந்த பகுதிகளில் ஆகும்.
- தொல்குடி வேளிர் வேந்தர்
ஐயா ர. பூங்குன்றன் அவர்களுக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

வரலாறு அறிவோம் – 4

வரலாறு அறிவோம் - 2

வரலாறு அறிவோம் - 3