Posts

Showing posts from March, 2019

நாடாளுமன்றத் தேர்தல் - 2

பகுதி – 2      நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட் டு தமிழ் நாட்டில் 40 எம் . பிக்கள் என மொத்த இந்தியாவில் 545 எம் . பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் எனப் பார்த்தோம் . எதற்காகச் செல்கிறார்கள் ? நமது பிரதிநிதியாக மாநிலங்களின் குரலை அங்கு பிரதிபலிக்க , மக்களுக்கு , மாநிலத்திற்கு, நாட்டிற்குத் தேவையான சட்ட திட்டங்களை வகுக்க , செயல்படுத்தவே செல்கிறார்கள் . இந்திய அரசியலமைப்பு மாநிலத்தை நிர்வகிக்கும் மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரம், நாட்டினை நிர்வகிக்கும் ஒன்றிய அரசுக்கு என்னென்ன அதிகாரம், இரு அரசுகளுக்குமான பொது அதிகாரங்கள் என்னென்ன என வகைப்படுத்தி உள்ளது. யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது எனத்தெரிந்து கொண்டால் தான் நம் பிரச்சனைகள் , நம் தேவைகளுக்கு ஏற்றபடி நம்மால் மாநில, மத்திய அரசுகளை தேர்ந்தெடுக்க முடியும் .       மாநில அரசுக்கான அதிகாரங்கள் மாநிலப்பட்டியலில் அடங்கும் , மத்திய அரசுக்கான அதிகாரங்கள் ஒன்றிய ப்பட்டியலில் இருக்கும் . இருவரும் சேர்ந்து முடிவெடுப்பவை பொதுப்பட்டியலில் இருக்கும் . அதாவது ப...

நாடாளுமன்றத் தேர்தல் - 1

பகுதி – 1 வரும் ஏப்ரல் 18 இந்தியப் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது . நாடாளுமன்றம் என்றால் என்ன ? அதன் வேலைகள் என்ன ? எம்பிக்கள் எனப்படும் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப் படுகிறார்கள் ? அவர்களை எதற்காகத் தேர்வு செய்கிறோம் ? அவர்கள் என்ன செய்வார்கள் ? என புதிய வாக்காளர்களுக்கு பல கேள்விகள் இருக்கும் . நாடாளுமன்றம் , அதன் தேர்தல் குறித்து இனி தெரிந்து கொள்ளலாம் . நாற்பதும் நமதே எனக் கட்சிகள் முழக்கமிடுவதை கேட்டிருப்போம் . அந்த 40 என்னவெனில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் . இந்த 40 தொகுதிகளுக்கே வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் . அத்தேர்தல் எம் . பிக்கள் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் . இந்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் வேட்பாளர்கள் மக்களவை உறுப்பினர்கள் ) எனப்படுவர் . இதே போல எல்லா மாநிலங்களிலும் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் 20 தொகுதிகள் . கர்நாடகாவில் 28 தொகுதிகள் . எல்லா மாநிலங்களிலும...