நாடாளுமன்றத் தேர்தல் - 1


பகுதி – 1

வரும் ஏப்ரல் 18 இந்தியப் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றம் என்றால் என்ன? அதன் வேலைகள் என்ன? எம்பிக்கள் எனப்படும் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப் படுகிறார்கள்? அவர்களை எதற்காகத் தேர்வு செய்கிறோம்? அவர்கள் என்ன செய்வார்கள்? என புதிய வாக்காளர்களுக்கு பல கேள்விகள் இருக்கும். நாடாளுமன்றம், அதன் தேர்தல் குறித்து இனி தெரிந்து கொள்ளலாம்.

நாற்பதும் நமதே எனக் கட்சிகள் முழக்கமிடுவதை கேட்டிருப்போம். அந்த 40 என்னவெனில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள். இந்த 40 தொகுதிகளுக்கே வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறும். அத்தேர்தல் எம்.பிக்கள் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல். இந்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் வேட்பாளர்கள் மக்களவை உறுப்பினர்கள்) எனப்படுவர்.

இதே போல எல்லா மாநிலங்களிலும் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் 20 தொகுதிகள். கர்நாடகாவில் 28 தொகுதிகள். எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கைகள் இருக்கும். மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் அதிக தொகுதிகள் இருக்கும். குறைவாக உள்ள மாநிலங்களில் தொகுதிகள் குறைவாக இருக்கும். இப்படியாகவே தமிழ்நாட்டிற்கு 39 பாண்டிச்சேரிக்கு 1 என மொத்தம் 40 தொகுதிகள்.

சரி இந்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் M.P ஆவார்கள். அடுத்து என்ன நடக்கும்? தமிழ்நாட்டின் 40 எம். பிக்கள், கேரளத்தின் 28 எம்.பிக்கள் என இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மொத்தமாக 543 எம். பிக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குடியரசுத் தலைவர் இருவரை தேர்தல் இல்லாமலேயே எம்.பிக்களாக நியமிப்பார். இந்த இருவரும் ஆங்கிலோ இந்தியர்கள். மொத்தமாக 545 நாடாளுமன்ற உறுப்பினர்கள்(M.P). இவர்களே நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். அங்கு சென்று என்ன செய்வார்கள்? அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

-தொடரும்

சூர்யா

Comments

Popular posts from this blog

வரலாறு அறிவோம் – 4

வரலாறு அறிவோம் - 2

வரலாறு அறிவோம் - 3