Posts

Showing posts from April, 2018

வரலாறு அறிவோம் – 4

Image
வரலாறு அறிவோம் – 4 வேளிர் சங்க கால அகழாய்வு தொடக்க நிலையிலேயே உள்ளது . முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே வேளிர் வரலாற்றுக்கும் பெருங்கற்சின்னங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினை இன்னும் தெளிவாக அறிய முடியும் . இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள் , அகழ்வு சான்றுகள் , சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை வைத்து வேளிர் குறித்து அறிந்து கொள்ளலாம் . சங்க காலத்துக்கு முன்னரே வேளிர் உருவாகி விட்டனர் . வேளிர் எழுச்சிக்கும் வணிக வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . கால்நடைகள் செல்வமாக கருதப்பட்டது . எனவே ஆகோள் பூசல் தொடர்ந்து நடைபெற்றது . அதில் வென்றவர் முதலில் வேளாக ஏற்கப்பட்டு பின் காலப்போக்கில் அமைதிக் காலங்களிலும் வேளாகவே நிலை பெற்று இருக்கலாம் . ஒவ்வொரு தொல்குடிக்கும் ஒரு வேள் இருந்திருக்க வேண்டும் .   வேளிர் என்ற சொல் வெள் , வெளிச்சம் ஆகியவற்றில் இருந்து உருவான சொல் என அரங்கசாமி அவர்கள் கூறுவார் . வெள்ளை , வெண்மை , வெள்ளி என்ற சொற்கள் வெண்மை நிறம் அல்லது ’ ஒளியுடைய ’ என்ற பொருள் தரும் வெள் என்ற அட...