வரலாறு அறிவோம் - 3
வரலாறு அறிவோம் - 3 தொல் எழுத்து ஆய்வின் வரலாறு நம் நாட்டின் தொல்லியல் வரலாறு குறித்த ஆய்வினை தொடங்கி வைத்து, தொடர்ந்து பல கல்வெட்டுக்களை ஆராய்ந்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களுடன் இணைந்து இந்திய அறிஞர்களும் பணியாற்றினர். இந்தியாவில் கல்கத்தா கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி சர் வில்லியம் ஜோன்ஸ் ஆகியோரால் 1783 ஜனவரி 15 ஆம் நாள் வங்காள ஆசியவியல் கழகம் நிறுவப் பட்டது. இக்கழகம் ஏசியாட்டிக் ரிசர்ச்சஸ் என்ற ஆய்விதழை வெளியிட்டது. இதுவே இந்திய வரலாற்றைப் பற்றிய அறிவு வளர்ச்சியில் முதல் ஆய்வு நூல். ஜோசப் பிரின்சப், ஜார்ஜ் பியூலர், ஓஜா ஆகியோர் இந்திய எழுத்து வரி வடிவ வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடிகள் ஆவர். இன்னும் பலரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏ. சி. பர்னல், டி. ஏ. கோபி நாதராவ், கே.வி. சுப்ரமணிய ஐயர், தி. ந. ராமச்சந்திரன், எஸ். எச். ரித்தி, ஐராவதம் மகாதேவன், டி. வி. மகாலிங்கம், இரா. நாகசாமி, கே.ஜி. கிருஷ்ணன், நடன. காசிநாதன், எ. சுப்புராயலு, புலவர் செ. இராசு, என். சேதுராமன் ஆகியோர் தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி பற்றி ஆய்வு ...